ஈவ்டீசிங்

hindu-women.jpg

 

ச்சீ..

பொம்பளைங்க

நிம்மதியா வெளியே

போயிட்டு வரமுடியுதா?

குறுக்க வந்த

ஆபாசமா பேசுறான்.

பின்னால வந்து

துணிய புடிச்சு இழுக்கிறான்.

கூட்டத்துல உரசுறான்

ஆம்பிளைக்கு

இதுதான் அழகுன்னு நினைப்புப் போல

ரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”

  

பெண்களுக்கு எதிரான

வன்கொடுமைகளைக் கண்டித்து

காலையில் பக்கத்து விட்டு

பாபு அம்மாவிடம்

ஆவேசப்பட்ட

அம்பிகா அத்தைதான்

மாலை வீட்டில்

டீ.வியின் முன்

பவ்யமாக அமர்ந்து

குகி. கூவமின்

ஆன்மீக அருளுரை

கேட்டுக் கொண்டிருந்தாள்

   

என்ன பண்ணார் தெரியுமோ

நம்ம கிருஷ்ணர்,

பெண்கள் குளிச்சிண்டுருந்த

குளத்துக்குப் போய்

அவா துணியெல்லாம்

தூக்கிண்டு ஓடியாந்துட்டார்.

  

அதேபோல் நம்ம கந்தனும்

மாறுவேஷம் போட்டுண்டு

அவா அண்ணா

விநாயகர் உதவியோட

வள்ளியை

ஓட, ஓட

விரட்டி, விரட்டி

காதல் பண்ணார்.

  

நம்ம பகவான்களுக்கு

மானிட பெண்களோடு

விளையாடுறதுல தனி குஷி”

 

கேட்டுக் கொண்டிருந்த

மாதர் சங்க பொறுப்பாளர்

அம்பிகா அத்தை முகத்தில்

பக்தி கலந்த பூரிப்பிருந்தது.

     

வே. மதிமாறன்

2002 ல் தினகரன் வசந்தம் இதழில் எழுதியது.

ராஜமரியாதை

tea_shop.jpg  

குலக்கல்வித் திட்டம்

போராட்டம்

  

அடிதடி

சிறைச்சாலை

  

இட ஓதுக்கீடு

கல்வி

வேலைவாய்ப்பு

உயர் பதவி

ராஜமரியாதை

  

இருந்தும்

ஊருக்கு வெளியே சேரி.

   -‘இனிமாத இதழ், 1994 பிப்ரவரி        

வன்முறை

hmj.jpg  

இந்து என்று

சொல்வதில்

பெருமை கொள்வோம்

  

அல்லாஹ்

ஒருவனை தவிர

வேறு கடவுள் இல்லை

  

பாவிகளே

இயேசு கிறிஸ்துவை

விசுவாசியுங்கள்

  

எல்லா மதங்களும்

அன்பைத்தான் போதிக்கிறதாம்.

முற்போக்கு முகாம்களில்

மத நல்லிணக்கக் கூட்டம்

  -‘காதலாகி கடுப்பாகிநூல் 1999   

  

சுயமரியாதை

1071.jpg 

ஆளும் கட்சி

அரசியல் தலைவர்கள்

சினிமா பிரபலங்கள்

முதலாளிகள் முன்

மண்டியிட்டு

பல்டியடித்து

சலாம் போடும்

கவிஞனும்

கதாசிரியனும்

எழுத்தாளனும்

அறிஞனும்

தமிழ்

மக்களை பார்த்து

உனக்கு

மானம் இருக்கிறதா?

சொரணை இருக்கிறதா?

ரசனை இருக்கிறதா?”

என்று நாக்கைப்

பிடுங்குவது மாதிரி

நச்என்று கேட்டார்கள்.

   

காதலாகி – கடுப்பாகி1998

எது அவலம்

lamp.jpg  

கணவனை

காணவில்லை என்று

காவல் நிலையத்தில்

புகார்

செய்யச் சென்ற

பெண்ணை

போலிசார்

மாறி, மாறி

கற்பழித்தனர்.

                பத்திகைச் செய்தி

கற்பில் சிறந்தவள்

கண்ணகியா?

சீதையா?

தமிழ் அறிஞர்கள்

பேசிய பரபரப்பூட்டிய

பட்டிமன்றம்

                அதே பத்திரிகைச் செய்தி

காதலாகி – கடுப்பாகி1998

ஞானக்கூத்தன்

10.jpg  

கம்பனிடம்

கவிதை கரைபுரண்டு

ஓடியது,

உலகறிந்த விசயம்.

   

ஒட்டக்கூத்தனும்

சாதாரணமான

ஆள் கிடையாது.

   

அவுங்க ரெண்டு பேருக்கு

பிறகு

கவிதை

கன்னாபின்னான்னு

ஒடைச்சிக்கிட்டு

வந்தது

ஞானக்கூத்தனுக்குத்தான்

தெரியுமா?

   

மக்களுக்கு

கவிதை குறித்து

எந்த அறிவும்

கெடையாது.

கவிதை பற்றி

தெரியாத

  

முட்டாள் மக்கள்   

தேர்தெடுத்த

அரசாங்கத்தோட

கவிதை உணர்வும்

‘0’ தானே

அதனால்தான்

ஞானக்கூத்தனுக்கும்

இந்த அரசுக்கு

மரியாதை செய்யத் தெரியல.

   

மன்னர்

ஆட்சிதாங்க சரி.

  

அவுங்கதான்  

கவிதையை

மதிக்க தெரிஞ்சவங்க.

   

அப்படி

மன்னர்

அரியணையில்

வீற்றிருக்க

மன்னனை மகிழ்விக்கும்

உயர்ந்த கலைகளான

பரதநாட்டியம்

சாஸ்திரய சங்கிதம்

அது

முடிஞ்சதுக்கு

அப்புறமோ

முன்னமயோ

பசுவய்யா

ஞானக்கூத்தன்

இவங்களோட

மனம்

மகிழ வைக்கும்

நெகிழ வைக்கும்

கவிதைகள்…

    

மன்னன்

மகிழ்ச்சியின்

உச்சத்துக்கு சென்று

இவுங்களை

எப்படி உபசரிப்பான் தெரியுமா?

இவுங்க கவிதையின் வீச்சை

தாங்க முடியாம

இவுங்களுக்கு கால் அமுக்கி

விட்டாலும் விடுவான்.

   

மக்களோட

கழுத்தமுக்கினாலும்

கவிஞனோட

கால் அமுக்குறான்

பாருங்க

அவந்தாங்க மன்னன்.

ஆயிரம்தான் சொல்லுங்க

மன்னர் ஆட்சி

மன்னர் ஆட்சிதாங்க.

காதலாகி – கடுப்பாகி1998

கவிஞன்

poet.jpg

புல்லின்

நுனியில்

பனித்துளியில்

முகம் பார்த்தேன்.

   

ரோஜாவோடு

பேசினேன்.

  

செம்பருத்தி பூவில்

தேன் குடித்தேன்.

  

செவ்வரளி என்னோடு

கோபித்துக் கொண்டது.

   

வழக்கம்போல்

மல்லிகை என்னோடு

உறவு கொண்டது.

  

இன்று

என்னவாயிற்றோ

தெரியவில்லை.

என் பிரியமான

மனோரஞ்சிதம்

என் முகம் பார்க்க

மறுத்து விட்டது.

  

பூங்காவின் வாசலில்

ஒரே கூட்டம்.

  

யாரோ

மூன்று ஆண்கள்

ஒரு பெண்ணை

பலத்காரம்

செய்து விட்டார்களாம்.

  

என்ன அதிசயம்,

நான்

இருந்த இடத்திற்குப்

பக்கத்தில்தான்

இது நடந்திருக்கிறது.

காதலாகி – கடுப்பாகி1998

அறிவாளிகள் விமர்சிக்கிறார்கள்

lonely_not_alone.jpg 

பொய்ச் செய்தியை போடுகிறார்கள்

வேசியை விட கேவலமானவர்கள்

   

உன் கட்சியின் கொடி என்ன

அந்த நடிகை அவிழ்த்துப்போட்ட

புடவையா?”

    

நீ

சரியான ஆம்பிளையா

இருந்தா

இதுக்கு மறுப்பு சொல்றா

பாக்கலாம்?”

  

வெறும்

பிதற்றல்

பொம்பள மாதிரி

புலம்புவான் பொட்டப்பய…

  

உனக்கெல்லாம்

எதற்கு ஒரு மீசை?”

சவால் விட்டுக் கேட்கிறேன்

நிரூபிக்காவிட்டால்

நீ

நாளை முதல்

புடவை கட்டிக்கொள்கிறாயா?”

    

இவ்வளவும்

ஆண்கள்-ஆண்களை

பார்த்து திட்டிக் கொண்டது.

  -‘நந்தன்மாத இதழ்

புரட்சியாளர்கள்

lenin0.jpg

      

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்

உன் குழந்தைக்கு

லெனின் என்ற பெயரில்

ஞானஸ்நானம் செய்யமாட்டேன்

என்று

தீர்த்துச் சொல்லிவிட்டார்

பாதிரி ஜோசப் அடைக்கலம்

  

தமிழன்

தன் அடையாளம் இழந்தான்.

தன் மொழி இழந்தான்.

தாய்த்தமிழ் இருக்க

தறுதலை மொழியாம்

ஆங்கில மோகம்

பிடித்து அலைந்தான்.

நான் வாய்கிழிய

பேசுபவனல்ல,

வாழ்க்கையிலும் கடைபிடிப்பவன்.

நான் மறைந்தாலும்

தமிழுக்காக

என் மகன் ஷக்லைன் முஸ்தாக்

களத்தில் நிற்பான்.

   

ஏதோ

நம்ம ஜாதி சங்கம் அப்படிங்கறதுக்காக

நன்கொடை கொடுத்தேன்

அவ்வளவுதான்.

மத்தபடி

கோயில் கும்பாபிஷேகத்துக்கெல்லாம்

வரமுடியாது.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.

நான் பெரியார் வழி வந்தவன்.

காதலாகி – கடுப்பாகி1998

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

38691590.jpg

   

    

    

    

    

   

       

   

  

   என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

பனை ஏறும்

தந்தை தொழிலில்

இருந்து தப்பித்து

தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் 

   

பெரியாரின்

முரட்டுத்தனமான அணுகுமுறை

அதெல்லாம் சரிபட்டு வராதுங்க

இதுமுடி

வெட்டும் தோழரின் மகனான

எலக்ட்ரிக்கல் என்ஜினியர். 

    

என்னங்க

பெரியார் சொல்லிட்டா சரியா?

பிரமணனும் மனுசந்தாங்க.

திராவிட இயக்கம்

இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?

 இப்படி இந்தியா டுடே

பாணியில்கேட்டவர்

அப்பன் இன்னும்

பிணம் எரித்துக் கொண்டிருக

இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

சுபமங்களாவை விரித்தபடி

சுஜாதா

சுந்தர ராமசாமிக்கு

இணையாக

இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

அவருடைய மகன். 

  

ஆமாம்

அப்படி என்னதான் செய்தார் பெரியார்? 

   

   

***

‘இனி’ மாத இதழ்
1993 அக்டோபர்