புல்லின்
நுனியில்
பனித்துளியில்
முகம் பார்த்தேன்.
ரோஜாவோடு
பேசினேன்.
செம்பருத்தி பூவில்
தேன் குடித்தேன்.
செவ்வரளி என்னோடு
கோபித்துக் கொண்டது.
வழக்கம்போல்
மல்லிகை என்னோடு
உறவு கொண்டது.
இன்று
என்னவாயிற்றோ
தெரியவில்லை.
என் பிரியமான
மனோரஞ்சிதம்
என் முகம் பார்க்க
மறுத்து விட்டது.
பூங்காவின் வாசலில்
ஒரே கூட்டம்.
யாரோ
மூன்று ஆண்கள்
ஒரு பெண்ணை
பலத்காரம்
செய்து விட்டார்களாம்.
என்ன அதிசயம்,
நான்
இருந்த இடத்திற்குப்
பக்கத்தில்தான்
இது நடந்திருக்கிறது.
காதலாகி – கடுப்பாகி1998