“பொய்ச் செய்தியை போடுகிறார்கள்
வேசியை விட கேவலமானவர்கள்”
“உன் கட்சியின் கொடி என்ன
அந்த நடிகை அவிழ்த்துப்போட்ட
புடவையா?”
“நீ
சரியான ஆம்பிளையா
இருந்தா
இதுக்கு மறுப்பு சொல்றா
பாக்கலாம்?”
“வெறும்
பிதற்றல்
பொம்பள மாதிரி
புலம்புவான் பொட்டப்பய…”
“உனக்கெல்லாம்
எதற்கு ஒரு மீசை?”
“சவால் விட்டுக் கேட்கிறேன்
நிரூபிக்காவிட்டால்
நீ
நாளை முதல்
புடவை கட்டிக்கொள்கிறாயா?”
“இவ்வளவும்
ஆண்கள்-ஆண்களை
பார்த்து திட்டிக் கொண்டது.
-‘நந்தன்’ மாத இதழ்