“எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்
‘உன் குழந்தைக்கு
லெனின் என்ற பெயரில்
ஞானஸ்நானம் செய்யமாட்டேன்
என்று
தீர்த்துச் சொல்லிவிட்டார்
பாதிரி ஜோசப் அடைக்கலம்”
“தமிழன்
தன் அடையாளம் இழந்தான்.
தன் மொழி இழந்தான்.
தாய்த்தமிழ் இருக்க
தறுதலை மொழியாம்
ஆங்கில மோகம்
பிடித்து அலைந்தான்.
நான் வாய்கிழிய
பேசுபவனல்ல,
வாழ்க்கையிலும் கடைபிடிப்பவன்.
நான் மறைந்தாலும்
தமிழுக்காக
என் மகன் ஷக்லைன் முஸ்தாக்
களத்தில் நிற்பான்.”
“ஏதோ
நம்ம ஜாதி சங்கம் அப்படிங்கறதுக்காக
நன்கொடை கொடுத்தேன்
அவ்வளவுதான்.
மத்தபடி
கோயில் கும்பாபிஷேகத்துக்கெல்லாம்
வரமுடியாது.
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
நான் பெரியார் வழி வந்தவன்.”
காதலாகி – கடுப்பாகி1998